News April 24, 2024

ரேஷன் அரிசியில் எலியின் எச்சம்: மக்கள் அச்சம்

image

கூடலூர் அருகே உள்ள பந்தலூரில் அமைந்துள்ள நியாயவிலை கடையில் வழங்கப்பட்ட அரிசியில் எலியின் எச்சம், சணல் கயிறு, கான்கிரீட் கற்கள் இருப்பதை கண்டு பயனாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கடை ஊழியர்களிடம் கேட்டபோது, ஊழியர்கள் மிகவும் அலட்சியமாக பதில் கூறுவதாக பயனாளிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே அரசு சம்பந்தப்பட்ட துறையை கண்காணித்து தரமான அரிசியை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News

News December 27, 2025

உதகை – குன்னூர் சாலையில் விபத்து!

image

நீலகிரியில், உதகை – குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் காணிக்கராஜ் நகர் அருகே இன்று இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்தவர்களை மீட்ட பொதுமக்கள், தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து விரைந்து வந்த அருவங்காடு காவல்துறையினர், விபத்து நிகழ்ந்தது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 27, 2025

சாறுமுன்: உதகை – குன்னூர் சாலையில் விபத்து

image

உதகை – குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் காணிக்கராஜ் நகர் அருகே சற்றுமுன் (இன்று) இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்தவர்களை மீட்ட பொதுமக்கள், தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து விரைந்து வந்த அருவங்காடு காவல்துறையினர், விபத்து நிகழ்ந்தது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 27, 2025

நீலகிரி: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்அப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்அப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE IT!

error: Content is protected !!