News April 8, 2025
ரேஷன் அட்டையில் திருத்தும் செய்யணுமா?

வரும் ஏப்ரல் 12ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, செங்கல்பட்டு மண்டல உதவி ஆணையர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் அட்டை திருத்த முகாம் நடத்தபட உள்ளன. பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்றவற்றை செய்து கொள்ளலாம். இலவசமாகவே ரேஷன் கார்டில் அப்டேட் செய்துகொள்ளலாம். இந்த அறிவிப்பால் ரேஷன் அட்டைதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஷேர் பண்ணுங்க
Similar News
News September 19, 2025
சிட்லபாக்கம் ஏரியில் 2 சிறுவர்கள் மூழ்கி பலி

தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் ஏரியில் குளிக்க சென்ற வடமாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் மற்றும் லோகேஷ் ஆகிய 2 சிறுவர்களும் நீச்சல் தெரியாத காரணத்தால் நீரில் மூழ்கி பலியாகினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 19, 2025
செங்கல்பட்டு: வீட்டில் தங்கம் சேர செல்ல வேண்டிய கோவில்

செங்கல்பட்டு, காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ளது காளத்தீஸ்வரர் கோவில். இங்குள்ள சிவலிங்கத் திருமேனி சுயம்புவாகத் தோன்றியதாக சொல்லப்படுகிறது. பல்வேறு வேண்டுதலுக்காக இக்கோவிலுக்கு பக்தர்கள் குவிகின்றனர். அதில், முக்கியமாக இங்குள்ள நந்திதேவருக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டால், வீட்டில் தங்க நகைகள் சேரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. *நகை சேர்க்க விரும்பும் நண்பர்களுக்கு பகிரவும்*
News September 19, 2025
செங்கல்பட்டு: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

செங்கல்பட்டு மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!