News February 20, 2026
ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு வார்னிங்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு TN அரசு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. ரேஷன் அட்டையில் பெயர் இருக்கும் அனைத்து உறுப்பினர்களும் தங்களது கைரேகையை (Biometric) பதிவு செய்வது கட்டாயம். இதுவரை பதிவு செய்யாதவர்கள் அருகிலுள்ள ரேஷன் கடைகளுக்குச் சென்று அடுத்த வாரத்திற்குள் (பிப்.25 கடைசி நாள்) முடிக்குமாறு மாவட்ட வாரியாக அறிவுறுத்தப்பட்டு வருகின்றன. கைரேகை பதிவு செய்யாதவர்களின் ரேஷன் அட்டை முடக்கப்படலாம்.
Similar News
News February 20, 2026
பொது மயானத்தை மறுப்பதும் தீண்டாமையே: சென்னை HC

பொது மயானத்தை பட்டியலினத்தவர் பயன்படுத்த அனுமதி மறுப்பதும் தீண்டாமைக்கு சமமே என சென்னை HC தெரிவித்துள்ளது. ஈரோடு கருமாண்டி செல்லிப்பாளையத்தில் வண்டிப்பாதை நிலத்தை மயானமாக மாற்றக் கோரி கிராமத்தினர் தொடர்ந்த வழக்கின் விசாரணையில் இக்கருத்தை சென்னை HC கூறியுள்ளது. கண்ணியத்துடன் வாழும் உரிமை அனைவருக்கும் உள்ளது போல, இறந்தவர்களுக்கு கண்ணியமாக இறுதிச்சடங்கு செய்யவும் உரிமை உள்ளது என குறிப்பிட்டுள்ளது.
News February 20, 2026
அமைச்சர் பதவியிலிருந்து நேருவை தூக்குங்க: விஜய்

அமைச்சர் பதவியில் இருந்து கே.என்.நேருவை நீக்க வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். நகராட்சி துறையில் நடைபெற்றுள்ள ₹1,020 கோடி ஊழல் தொடர்பான ஆதாரங்களை ஐகோர்ட் உறுதிசெய்தும், நடவடிக்கை எடுக்காத திமுக அரசுக்கு இது பெரும் அவமானம் என சாடியுள்ளார். மேலும், ஊழல் மலிந்த இந்த அரசை 2026 தேர்தலில் மக்கள் தூக்கியெறிய தயாராகிவிட்டனர் என்றும் தெரிவித்துள்ளார்.
News February 20, 2026
உங்களுக்கு PM KISAN பணம் வருமா?.. செக் பண்ணுங்க!

PM KISAN திட்டத்தின் 22-வது தவணையை (₹2,000) அடுத்த வாரம் (அ) மார்ச் முதல் வாரத்தில் மத்திய அரசு விடுவிக்கும் என்ற மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. முக்கியமாக, யாருக்கெல்லாம் பணம் கிடைக்கும் என்பதை ஆன்லைனில் அறியலாம். pmkisan.gov.in இணையதளம் சென்று, Beneficiary List ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். அதன்பின், விவரங்களை உள்ளிட்டு Get Report பட்டனை கிளிக் செய்தால் பயனாளிகளின் பட்டியல் வெளியாகும். SHARE


