News November 7, 2025
ரேஷன் அட்டைகளில் மாற்றம்.. தமிழக அரசு அறிவிப்பு

ரேஷன் அட்டைகளில் இனி ஆண்டுக்கு இருமுறை மட்டுமே திருத்தங்கள் மேற்கொள்ள முடியும். அதன்படி, ஜனவரி – ஜூன், ஜூலை – டிசம்பர் என இருமுறை மட்டுமே முகவரி மாற்றம், புதிய உறுப்பினர் சேர்க்கை, நீக்கம் ஆகிய பணிகளை செய்ய முடியும். புதிய ரேஷன் அட்டை பெற தனி சமையலறையுடன் வசிப்பவர்கள், ‘ஆதார்’ எண்ணுடன் உணவு வழங்கல் துறையின் <
Similar News
News January 27, 2026
தவெக கூட்டணியில் ராமதாஸ்?

NDA கூட்டணியில் அப்பாவை இணைக்கக் கூடாது என அன்புமணி நிபந்தனை வைத்துள்ளதாகவும், திமுக கூட்டணியில் ராமதாஸை சேர்க்கக் கூடாது என்று விசிக முரண்டு பிடிப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் தவெகவுடன் கூட்டணி அமைக்க ராமதாஸ் முனைப்பு காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓரிரு நாள்களில் செங்கோட்டையன் மூலம் ராமதாஸை கூட்டணியில் இணைக்க பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. விஜய்க்கு பலம் சேர்க்குமா?
News January 27, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹520 குறைந்தது

நேற்று வரலாற்றில் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை இன்று (ஜன.27) குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹65 குறைந்து ₹14,960-க்கும், சவரன் ₹520 குறைந்து ₹1,19,680-க்கும் விற்பனையாகிறது. நேற்று 1 கிராம் ₹15,000-ஐ கடந்து விற்பனையான நிலையில், இன்று விலை குறைந்துள்ளதால் நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News January 27, 2026
ஜல்லிக்கட்டு வீரர் உயிரிழந்தால் ₹10 லட்சம்: EPS

நாமக்கல் மாவட்டம் சாலப்பாளையத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை EPS தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஜல்லிக்கட்டு போட்டியின் போது உயிரிழக்கும் வீரரின் குடும்பத்தினருக்கு ₹10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். ஏற்கெனவே சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலை வழங்கப்படும் என CM ஸ்டாலின் பொங்கலின்போது அறிவித்திருந்தார்.


