News February 10, 2025
ரெட்டியார்சத்திரம் அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு

ரெட்டியார்சத்திரம் அருகே கதிரணம்பட்டியில் இன்று காரை வழிமறித்து, திருப்பூர் முருகன்பாளையத்தை சேர்ந்த வசந்த் (24) என்பவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரெட்டியார்சத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 6, 2026
திண்டுக்கல் கலெக்டர் GH-ல் சிகிச்சை!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன், கடந்த சில மாதங்களாக அடி வயிற்று வலியால் அவதிப்பட்ட நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் சிறுநீரகத்தில் கல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மருத்துவக் குழு அறுவை சிகிச்சை செய்து கல்லை அகற்றியது. தற்போது அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.
News April 6, 2026
திண்டுக்கல்: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26, B.26, C.26, D.26 (எ.கா. A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec)
இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News April 6, 2026
ஒட்டன்சத்திரம்: மேலும் ஒருவரின் உடல் மீட்பு!

கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஆடில்(19) தனது நண்பர்கள் சதாம் உசேன்(18), ஆயாஸ்(19), பயாஸ்(19) ஆகியோருடன் தலையூத்து அருவிக்கு சென்றனர். தடைசெய்யப்பட்ட மேல்தலையூத்து பகுதியில் குளித்தபோது ஆயாஸ், பயாஸ் தவறி நீரில் மூழ்கினர். அவர்களை காப்பாற்ற சென்ற ஆடில், சதாம் உசேனும் மூழ்கி 4 பேரும் உயிரிழந்தனர். 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், 3 நாட்கள் தேடுதலுக்கு பின், சதாம் உசேனின் உடலும் நேற்று மீட்கப்பட்டது.


