News January 2, 2025
ரெட்டிப்பாளையம்: புத்தாண்டு கொண்டாடிய வாலிபர் பலி

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியைச் சேர்ந்த மாதேஷ் (26) அவரது நண்பர்களுடன் சேர்ந்து டிச.31 இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் ரெட்டிப்பாளையம் பகுதியில் சென்ற போது வேகத்தடையில் நிலைதடுமாறி எதிரே வந்த லாரி மீது மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News August 7, 2025
அரியலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின்படி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இரவு ரோந்து காவலர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் (ஆகஸ்ட் 6) ரோந்து பணி செல்லக்கூடிய அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவசர காலத்தில் இந்த எண்ணை தொடர்ப்பு கொண்டு புகார் அளிக்கலாம். அல்லது 100ஐ அழைக்கலாம். மற்றவர்களுக்கும் இந்த தகவலை பகிரவும்.
News August 6, 2025
அரியலூர்: BANK லாக்கரில் நகை இருக்கா? கவனம்!

BANK லாக்கரில் நகையை வைக்கும் முன் இதை தெரிஞ்சிக்கோங்க! உங்கள் நகை பற்றிய விவரங்கள் வங்கிக்கு தெரியாது. தீ விபத்து, அல்லது திருட்டு போனால் RBI விதிமுறைப்படி காப்பீட்டு தொகை மட்டுமே வழங்கப்படும். லாக்கரை பொறுத்து ஆண்டுக்கு ரூ.1,500 முதல் 12,000 வரை கட்டணம் செலுத்த வேண்டும். வங்கி விடுமுறை, அரசு விடுமுறையில் லாக்கரில் நகை எடுக்கவோ வைக்கவோ முடியாது. அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்!
News August 6, 2025
முதலமைச்சர் கோப்பை போட்டிக்கான QR குறியீடு அறிமுகம்

முதலமைச்சர் கோப்பை 2025 விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த போட்டிகளுக்கான முன்பதிவு “க்யூ ஆர்” குறியீட்டினை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிமுகம் செய்து வைத்தார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி, மாவட்ட வருவாய் அலுவலர் மல்லிகா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.