News January 9, 2025
ரூ.9 ஆயிரம் சம்பளம் உயர்வு: சாம்சங் நிர்வாகம் அறிவிப்பு

சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலையில், பணியாளர்கள் ஒரு பகுதியினர் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு செப்.9ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைமை செயலகத்தில் நடந்த பேச்சு வார்த்தையில், இரு தரப்பினரும் ஏற்று கொள்ளும் வகையில் சுமூக முடிவு ஏற்பட்டு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. மேலும், ரூ.9,000 சம்பள உயர்வு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 16, 2026
காஞ்சிபுரத்தில் ஹோட்டல் தொடங்க ரூ.50,000!

மத்திய அரசின் அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் மூலம் ஹோட்டல், டிபன் கடை, கேட்டரிங் தொழில் தொடங்க பெண்களுக்கு ரூ.50,000 கடன் உதவி வழங்கப்படுகிறது. இந்த கடன் தொகையை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் (36 மாதங்கள்) கால அவகாசமும் வழங்கப்படுகிறது. கடனுக்கான முதல் தவணையை செலுத்த தேவையில்லை. மேலும் தகவல்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகலாம்.
News February 16, 2026
காஞ்சிபுரம்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

காஞ்சிபுரம் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <
News February 16, 2026
ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கர விபத்து!

காஞ்சிபுரம்; வேலூரை நோக்கி சென்று கொண்டிருந்த கார், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவகம் அருகே சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதியது. இதில், மின் கம்பம் சேதமடைந்து, காரின் மேல் விழுந்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் காரில் இருந்த டிரைவர், 3 பெண்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.


