News August 7, 2025

ரூ.8,40,000 இழப்பீடு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு

image

பெரம்பலூர் மாவட்டம் பில்லங்குளம் ஊராட்சியில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் ஜெயராமன், தமிழ்செல்வி,செந்தில்வேலன், வேல்முருகன், அருள்மணி ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. கலைஞர் கனவு இல்லத்தில் வீடு கட்டியவர்கள் பெயரை இதில் சேர்த்து ரூ.8,40,000 முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இது குறித்து ஊழல் தடுப்பு, கண்காணிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News August 10, 2025

சாலை விபத்தில் ஒருவர் பலி; போலீஸ் விசாரணை

image

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம் எழுத்தூர் சேர்ந்த மலையராஜா என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு பகுதியில் சாலை தடுப்பில் மோதி விழுந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே மலையராஜா பலியானார். இந்நிலையில் உடலை மீட்ட காவல்துறையினர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News August 10, 2025

பெரம்பலூர்: ரூ.18,000 சம்பளத்தில் செவிலியர் வேலை!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள Nurse, Pharmacist, Lab Technician பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.8,500 – 18,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> விண்ணப்பத்தை பதிவிரக்கம் செய்து தேவையான தகவல்களை பூர்த்தி செய்து வருகிற ஆகஸ்ட் 14ம் தேதிக்குள் மாவட்ட சுகாதார அலுவலகம், பெரம்பலூர் என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும். SHARE

News August 10, 2025

பெரம்பலூர்: குடற்புழு நீக்கம் சிறப்பு முகாம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் அங்கன்வாடி மையம் உள்ளிட்ட இடங்களில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் (11.08.2025) அன்று நடைபெறவுள்ளது. மேலும் விடுபட்ட குழந்தைகளுக்கு (18.08.2025) அன்று வழங்கப்படவுள்ளது. எனவே குடற்புழு மாத்திரைகளை மாணவர்கள் மற்றும் பெண்கள் உட்கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!