News October 23, 2024

ரூ.83 லட்சம் மீனாட்சி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை

image

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அதனைச் சார்ந்த 10 கோயில்களில் உள்ள உண்டியலை அனைத்தும் மாதம் ஒருமுறை திறந்து எண்ணப்படும். அதன்படி நேற்று(அக்.22) அனைத்து கோயில்களின் உண்டியல்கள் திறந்து மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள பழைய திருமண கல்யாண மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது. காணிக்கையாக 83 லட்சத்து 24 ஆயிரத்து 637 ரூபாயும் 196 கிராம் தங்கமும் 699 கிராம் வெள்ளியும் கிடைக்கப்பெற்றது.

Similar News

News December 2, 2025

மதுரை அருகே வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் நகை திருட்டு

image

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் சிக்கந்தர் சாவடி அருகே இ.எம்.டி. நகர் விரிவாக்க பகுதி சேர்ந்த மகேந்திரன் 67 மனைவியுடன் 10 நாட்களுக்கு முன் பரமக்குடி உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றார். நேற்று காலை திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 8 பவுன் நகை ரூ 45 ஆயிரம் திருடு போனது தெரிந்தது. அலங்காநல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 2, 2025

மதுரை: தூங்கி கொண்டிருந்த ரவுடி குத்தி கொலை

image

மதுரை செல்லூர் மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டித்துரை போலீசாரின் ரவுடி பட்டியில் உள்ளவர். வழக்கு ஒன்றில் ஜாமினில் வெளியே வந்த 10 நாட்களாக நிலையில், அப்பகுதி நாடக மேடையில் நேற்று மாலை தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம கும்பல் கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றது, பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 2, 2025

மதுரை: விஷம் குடித்து பெண் தற்கொலை

image

திருமங்­க­லத்தை சேர்ந்­த­வர் பாண்டி­ய­ரா­ஜன் மனைவி லட்­சுமி(55). இவர் இதய நோயால் பாதிக்­கப்­பட்­டிருந்­த அவருக்கு அடிக்கடி நெஞ்சுவலி ஏற்­ப­டுவதுண்டு. சமீபமாக தொடர்ந்து வலி தாங்­க­ முடி­யா­மல் போக, விஷம் குடித்து நேற்று மயங்கி கிடந்­தார். அவரை மதுரை அரசு மருத்துவம­னை­யில் சேர்த்­த­னர் .அங்கு சிகிச்சை பலனின்றி லட்­சுமி இன்று உயிரி­ழந்­தார். திருமங்­க­லம் போலீ­சார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!