News December 18, 2025
ரூ. 6.25- ஆக தொடர்ந்து நீடிக்கும் முட்டை விலை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.6.25- காசுகளாக விற்பனை ஆகி வருகின்றது. இந்த நிலையில், இன்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டை விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை ரூ.6.25-ஆக நீடிக்கின்றது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை யொட்டி கேக் தயாரிக்க முட்டையின் தேவை அதிகரித்துள்ளதால் விலை உயர்வடைந்துள்ளது.
Similar News
News December 20, 2025
நாமக்கல் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கானு தெரியலையா? கவலை வேண்டாம். முதலில் இந்த<
News December 20, 2025
நாமக்கல் மக்களே முக்கிய அறிவிப்பு!

அஞ்சல் துறை வாடிக்கையாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 29-ந் தேதி காலை 11 மணியளவில் நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அஞ்சல் வாடிக்கையாளர்கள் தங்களது புகார்களை “அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், நாமக்கல் கோட்டம், நாமக்கல்-637001” என்ற முகவரிக்கு வரும் 26-ந் தேதிக்குள் சென்றடையுமாறு அனுப்பலாம் (அ) கூட்டத்தில் கலந்து கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.
News December 20, 2025
நாமக்கலில் 11.67% வாக்காளர் பெயர்கள் நீக்கம்!

நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணிகளின் கீழ் வரைவுக் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்ட பட்டியலின்படி, மாவட்டத்தில் மொத்தமாக 14,66,660 வாக்காளர்கள் பதிவாகியுள்ளனர். இதில் தகுதி இழப்பு, இடமாற்றம் உள்ளிட்ட காரணங்களால் 1,93,706 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 11.67 சதவீதம் என கணக்கிடப்பட்டுள்ளது.


