News April 29, 2025
ரூ.6 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

வெளிப்பாளையம் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் அங்கு விரைந்த போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டில் ரூ.6 லட்சம் மதிப்பிலான 12 கிலோ கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார் இதில் ஈடுபட்ட ரேவதி, பிரகாஷ் மற்றும் இவரது மனைவி ரேணுகா ஆகியோரை கைது செய்தனர்.
Similar News
News October 30, 2025
நாகை: மக்களிடமிருந்து 17 மனுக்களை பெற்ற எஸ்பி

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் தலைமை தாங்கி, பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 17 மனுக்களை பெற்று, பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
News October 29, 2025
நாகை எஸ்.பி.அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் தலைமை தாங்கி, பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 17 மனுக்களை பெற்று, பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
News October 29, 2025
நாகை: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் வேண்டுமா?

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க <