News December 30, 2025
ரூ.3.75 லட்சம் உதவி: நாகை இளைஞர்களுக்கு வாய்ப்பு!

நாகை மாவட்டத்தில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (UYEGP) கீழ், தொழில் தொடங்க ரூ.3.75 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கும் குறைவாக உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் நாகை மாவட்ட தொழில் மையத்தை அணுகி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 1, 2026
நாகை: B.E / B.Tech படித்தவர்களுக்கு அரசு வேலை!

Bharat Electronics Limited (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள 119 Trainee Engineer-I பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 119
3. வயது: 21 – 28
4. சம்பளம்: ரூ.30,000 – ரூ.40,000
5. கல்வித்தகுதி: B.E / B.Tech
6. கடைசி தேதி: 09.01.2026
7. விண்ணப்பிக்க:<
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!
News January 1, 2026
நாகை: லோன் வாங்கியவர்கள் கவனத்திற்கு…

நீங்கள் வங்கியில் வாங்கிய கடனை (LOAN) தவிர்க்க முடியாத காரணங்களால் சரியாக செலுத்த முடியாத சூழலில், வங்கி பணியாளர்கள் யாரேனும் உங்களை தரக்குறைவாக பேசினால் அவர் மீது உங்களால் புகார் அளிக்க முடியும் என்பது தெரியுமா? ஆம்<
News January 1, 2026
நாகை: ரயில் நேரம் மாற்றம்

வேளாங்கண்ணி – எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில், காரைக்குடியில் மின்சார எஞ்சின், டீசல் எஞ்சின் ஆக மாற்றம் செய்யப்படுவதால், இரவு 11:05க்கு புறப்பட்ட ரயிலானது இனி செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 11:50க்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருத்துறைப்பூண்டி முதல் காரைக்குடி வரை உள்ள ரயில் பாதையானது மின் மயமாக்கப்பட்டதும் ரயில் வழக்கம்போல இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


