News April 8, 2025

ரூ.2.50 லட்சம் திருமண உதவித்தொகை

image

சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களுக்கு அம்பேத்கர் கலப்பு திருமண உதவித் திட்டத்தின் கீழ் ரூ.2.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற, தம்பதியில் ஒருவர் SC/ST வகுப்பைச் சேர்ந்தவராகவும், மற்றொருவர் BC/MBC வகுப்பைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். தம்பதிகளின் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். <>ambedkarfoundation.nic.in<<>> என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News April 17, 2025

டிராக்டர் – பைக் மோதல்: ஒருவர் உயிரிழப்பு

image

உத்திரமேரூர் அடுத்த சேத்துப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விநாயகம் (45), கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தனது உறவினரான எட்டியப்பன் உடன் செய்யாறு – பெருநகர் சாலை கீழ்நீர்குன்றம் கிராமம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த டிராக்டர், பைக் மீது மோதியது. இதில் விநாயகம் உயிரிழந்தார். பைக்கை ஒட்டிச் சென்ற எட்டியப்பன் பலத்த காயமடைந்தார். விபத்து குறித்து அனக்காவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 16, 2025

காஞ்சிபுரத்தில் அன்னம்மாள் கேட்டரிங் கல்லூரியில் மோசடி

image

அன்னம்மாள் கேட்டரிங் கல்லூரியில் கடந்த வாரம் HOD சாமுஸ்ரீ மற்றும் அலுவலர் சத்தியகலா ஆகியோர் நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து பயிலும் மாணவர்கள் கட்டணம் சரியாக செலுத்தவில்லை என கல்லூரி நிர்வாகம் கூறியதை கேட்டு மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் குவிந்து, HOD சாமுஸ்ரீ கட்டணத்தை வசூலித்து விட்டு ஏமாற்றிவிட்டதாக புகாரளித்துள்ளனர்.

News April 16, 2025

ஜாக்கிரதை! ஒரு க்ளிக் உங்கள் வாழ்க்கையை மாற்றலாம்!

image

அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி, அவற்றில் உள்ள எந்தவொரு இணையதள இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 1930 என்ற எண்ணை அழையுங்கள். இது குறித்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்

error: Content is protected !!