News April 6, 2025
ரூ.2.50 லட்சம் திருமண உதவித்தொகை

விழுப்புரம் மாவட்டத்தில் சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களுக்கு அம்பேத்கர் கலப்பு திருமண உதவித் திட்டத்தின் கீழ் ரூ.2.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற,தம்பதியில் ஒருவர் SC/ST போன்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராகவும்,மற்றொருவர் BC/MBC போன்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். https://ambedkarfoundation.nic.in/ என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம்
Similar News
News April 7, 2025
அங்கன்வாடி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. <
News April 7, 2025
காதலனை தாக்கி காதலியை கடத்தல்

திண்டிவனம் வட்டம் ஆசூர் கிராமத்தை சேர்ந்த நாகராஜ், அதே பகுதியை சேர்ந்த பெண்ணை வடபழநி கோவிலில் இரு நாட்களுக்கு முன் காதல் திருமணம் செய்தார். இதனை அறிந்த பெண் வீட்டார் இவர்களை சமாதானம் பேச வரவழைத்தனர். இவர்கள் நேற்று(ஏப்.06) மாலை காரில் தீவனூர் வந்தபோது பெண் வீட்டார் நாகராஜை தாக்கி விட்டு, பெண்ணை கடத்தி சென்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க நாகராஜ் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
News April 7, 2025
மயங்கி விழுந்து இளைஞர் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த குமளம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் குரு (36). குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்த இவருக்கு கிட்னி பாதிப்பு இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று இவர் தனது வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வளவனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.