News July 11, 2025

ரூ.15 லட்சம் வரை விபத்து காப்பீடு (1/2)

image

இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, புதிய விபத்து காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காப்பீடு, ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் வரையிலான செலவுகளை கவர் செய்யக்கூடியது. விபத்தில் உயிரிழந்தால் 100% காப்பீடு தொகை வழங்கப்படும். விபத்தில் எலும்புமுறிவு ஏற்பட்டால் ரூ.25,000 வழங்கப்படும். இந்த பாலிசி குறித்து தெரிந்து கொள்ள கள்ளக்குறிச்சி அதிகாரிகளை (04151-222441) தொடர்பு கொள்ளுங்கள். <<17028497>>தொடர்ச்சி<<>>

Similar News

News September 16, 2025

கள்ளக்குறிச்சியில் கலந்துரையாடல் கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட அரசு மாதிரிப் பள்ளி முன்னாள் மாணவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் கலந்துரையாடல் கூட்டம் இன்று (15.09.2025) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கார்த்திகா முன்னிலை வகித்தார். தங்கள் பள்ளி மற்றும் கல்லூரி அனுபவங்களை மாணவர்கள் பகிர்ந்துகொண்டனர்.

News September 16, 2025

கள்ளக்குறிச்சி இரவு நேர ரோந்து பணி விவரம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செப்.15 இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 16, 2025

வாக்குச்சாவடி மறு சீரமைப்பு ஆலோசனைக் கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வாக்குச்சாவடி மையங்களை பிரித்தல்,இடம் / பெயர் மாற்றம் மற்றும் மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடனான ஆலோசனை கூட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.

error: Content is protected !!