News May 14, 2024

ரூ.12.16 லட்சத்திற்கு விளை பொருட்கள் ஏலம்

image

அந்தியூர் அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண் விளை பொருட்கள் ஏலம் இன்று நடைபெற்றது. இதில் 3,866 தேங்காய்கள் ரூ.34,687 க்கும்,
67 மூட்டை தேங்காய் பருப்பு ரூ.1,76,322 க்கும் ஏலம் போனது. 334 மூட்டை நிலக்கடலை ரூ.8,46,244-க்கும், 20 மூட்டை எள் ரூ.1,59,256-க்கும் ஏலம் போனது. மொத்தம் வேளாண் விளை பொருட்கள் ரூ.12,16,509 க்கு ஏலம் போனதாக விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Similar News

News March 9, 2026

ஈரோடு: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்: தேர்வு இல்லை!

image

ஈரோடு மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 9, 2026

அறிவித்தார் ஈரோடு கலெக்டர்! GOOD NEWS

image

ஈரோடு மாவட்ட பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் லிட்டருக்கு ரூ.5 ஊக்கத்தொகை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி தெரிவித்துள்ளார். அரசு வழங்கும் ரூ.3 உடன் ஆவின் சார்பில் ரூ.2 கூடுதலாக வழங்கப்படுகிறது. மேலும், காப்பீடு, மருத்துவ வசதி மற்றும் கடன் போன்ற சலுகைகளைப் பயன்படுத்தி உற்பத்தியாளர்கள் அதிக அளவில் பால் வழங்கிப் பயனடையுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

News March 9, 2026

கே.பி.சுந்தராம்பாள் திருஉருவச் சிலை திறப்பு

image

கொடுமுடியில் அமைந்துள்ள மறைந்த பழம் பெறும் நடிகையும், திரைப்பட பின்னணிப் பாடகியுமான பத்ம ஸ்ரீ கே.பி.சுந்தராம்பாள் திருஉருவச் சிலையை காணொளி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்வில் தொடர்ந்து அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கே.ஈ.பிரகாஷ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார் மற்றும் கே.பி.சுந்தராம்பாள் குடும்பத்தினர் பங்கேற்றனர்.

error: Content is protected !!