News February 15, 2025
ரூ.100 க்கு விற்பனையான ரோஜா பூ

காஞ்சிபுரம் பூக்கடை சத்திரத்திற்கு, ஓசூரில் இருந்து பெங்களூரூ ரோஜா வகைகளான தாஜ்மஹால், ஒயிட், எல்லோ, கிராண்ட் காலா, அவலான்ஜி போன்ற பலவகை ரோஜா விற்பனைக்கு வந்தது. கடந்த வாரம், காஞ்சிபுரம் பூக்கடைகளில், 20 ரோஜா பூக்கள் அடங்கிய ஒரு கட்டு ரூ.600க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரு கட்டு ரோஜா ரூ.800க்கு விற்கப்பட்டது. சாலையோர பூ வியாபாரிகள், ஒரு ரோஜாவை 100 ரூபாய்க்கு விற்பனை செய்தனர்.
Similar News
News March 6, 2026
காஞ்சி: இந்த கார்டு இருந்தால் ரூ.5 லட்சம்!

காஞ்சிபுரம் மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லை என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் இலவசமாக தரமான மருத்துவத்தை பெறலாம். அதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Cardஐ பெற இப்போதே <
News March 6, 2026
காஞ்சிபுரம் கலெக்டர் அதிரடி உத்தரவு!

காஞ்சிபுரம் ஆட்சியர் சினேகா தலைமையில் நேற்று தேர்தல் செலவினக் கண்காணிப்புக் குறித்த மாவட்ட நுண்ணறிவுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய ஆட்சியர், தேர்தல் நேரத்தில் பணம், மது, போதைப்பொருட்கள் மற்றும் இலவசப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினருக்கு உடனுக்குடன் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
News March 6, 2026
காஞ்சிபுரத்தில் பயங்கர விபத்து!

காஞ்சிபுரம்: வெள்ளகேட் பகுதியில் இருந்து பால் பாக்கெட்டுகளை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று நேற்று இரவு சென்னைக்கு புறப்பட்டது. லாரியை லிங்கநாதன் (38) ஓட்டி வந்தார். படப்பை அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென கன்டெய்னர் லாரியில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. லிங்கநாதன் உடனடியாக லாரியை நிறுத்தி உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.


