News April 8, 2025

ரூ.1 லட்சம் வரை சம்பளம்; எப்படி விண்ணப்பிப்பது?

image

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO)மூலம் மேனேஜர், நிறுவன செயலாளர் உள்ளிட்ட பதவிகள் நிரப்பப்படுகிறது. இதற்கு தகுதியும், ஆர்வமுள்ளவர்கள் வரும் 24ஆம் தேதிக்குள்<> இந்த லிங்கை<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: மேனேஜர் பதவிக்கு CA/CMA /MBA.செயலாளர்- பட்டப்படிப்புடன் ACS முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு- 45 வயது வரை. தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும்.

Similar News

News April 16, 2025

கிருஷ்ணகிரி: மீன் பாசி குத்தகை: ஆட்சியர் தகவல்

image

சூளகிரி சின்னாறு அணையினை மீன் பாசி குத்தகை பெற விருப்பம் உள்ளவர்கள் 21-04-25-க்குள் www.tntenders.gov.in இல் ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தெரிவித்தார். மேலும் ஒப்பந்தப்புள்ளிகள் 21.4.2025 பிற்பகல் 2 மணி வரை சமர்ப்பிக்கலாம். ஏலம் தொடர்பான சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் inlandfisheries15@gmail .com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 16, 2025

இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News April 16, 2025

தீராத நோய்கள் தீர்க்கும் வள்ளி குளம்

image

காவேரிப்பட்டினம் சுண்டக்காய்பட்டி கிராமத்தில் கந்தர்மலை முருகன் கோவில் உள்ளது. இந்த மலையில் உள்ள குகையில் சூரிய ஒளி படாத வள்ளி குளம் உள்ளது. இந்த குளத்தின் நீரை பருகினால் தீராத நோயும் தீரும் என்பது நம்பிக்கை. வள்ளிக்கு விக்கல் ஏற்பட்ட போது சூரிய ஒளி படாத குளத்தின் நீரை பருகினால் விக்கல் தீரும் என முருகன் கூற வள்ளி இங்கு வந்து நீரை பருகியதாக கூறப்படுகிறது. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!