News July 6, 2025
ரூ.1 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1340 Junior Engineer பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, B.E/B.Tech முடித்தவர்கள் இங்கே <
Similar News
News July 6, 2025
பூமிக்கு அடியில் முருகன்: திண்டுக்கல் கோயில் சிறப்பு!

ரெட்டியார்சத்திரம், ராமலிங்கம்பட்டியில் பாதாள செம்பு முருகன் கோயில் கருவறை பூமிக்கு அடியில் 16 அடி ஆழத்தில் உள்ளது. பாதாளத்தில் பூமிக்கு அடியில், செம்பு உலோகத்திலான முருகன் வீற்றிருப்பதால் பாதாள செம்பு முருகன் என பெயர். இங்கே, கருங்காலி மாலைகளை, முருகனின் பாதத்தில் வைத்து பூஜை செய்து வழங்கப்படுகிறது. இதை அணிந்தால் குழந்தை பேறு, தொழிலில் முன்னேற்றம், வீடு, நிலம், சொத்துகள் கிட்டும் என்பது ஐதீகம்.
News July 6, 2025
2-வது கோப்பையை வெல்லுமா திண்டுக்கல்?

TNPL -இறுதிப்போட்டி திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர்.கல்லூரி மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் திருப்பூர் தமிழன்ஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.50 லட்சமும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.30 லட்சமும் பரிசாக வழங்கப்படும். இன்று இரவு இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது. இதில் எந்த அணி கோப்பையை வெல்லும் கமெண்ட் பண்ணுங்க மக்களே!
News July 6, 2025
திண்டுக்கல்லில் கட்டணமில்லா இ சேவை மையம் முகாம்

திண்டுக்கல் அருகே நல்லமநாயக்கன்பட்டி ஆலய வளாகத்தில் திண்டுக்கல் மாவட்ட இ-சேவை மைய உரிமையாளர்கள் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு உடல் உழைப்பு கூலி கட்டுமான அனைத்து பொது தொழிலாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் கட்டணமில்லா இணைய சேவைகள் முகாம் 08.07.2025 செவ்வாய்கிழமை காலை 08.00 மணி முதல் மாலை 05.00 வரை நடைபெற உள்ளது.