News December 11, 2025
ரூமி பொன்மொழிகள்

*வருத்தப்படாதீர்கள். நீங்கள் இழக்கும் எதுவும் வேறொரு வடிவத்தில் திரும்ப வரும். *நீங்கள் எவ்வளவு அமைதியாகிறீர்களோ, உங்களால் அவ்வளவு அதிகமாகக் கேட்க முடியும். *உங்கள் இதயத்திற்கு வழி தெரியும். அந்தத் திசையில் ஓடுங்கள். *வாழ்க்கையின் நோக்கம் அன்பாக மாறும் போது அனைத்து சந்தேகங்கள், விரக்தி மற்றும் அச்சம் போன்றவை முக்கியமற்றதாகிவிடும். *நீங்கள் எதைத் தேடுகிறீர்களோ அது உங்களைத் தேடுகிறது.
Similar News
News December 11, 2025
இண்டிகோ பயணிகளுக்கு ₹10,000 வவுச்சர்

தங்களது விமான சேவை ரத்தால் (டிச.3, 4, 5 ஆகிய தேதிகளில்) பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு டிராவல் வவுச்சர் வழங்கப்படும் என Indigo அறிவித்துள்ளது. தலா ₹10,000 மதிப்பிலான அந்த டிராவல் வவுச்சரை அடுத்த 12 மாதம் வரை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே விதிகளின்படி, விமானம் புறப்படவிருந்த 24 மணி நேரத்திற்குள் சேவை ரத்தானால், இழப்பீடாக ₹5,000 முதல் ₹10,000 வரை தரப்படும் என இண்டிகோ கூறியிருந்தது.
News December 11, 2025
உலகின் சக்திவாய்ந்த PASSPORT: இந்தியாவுக்கு எந்த இடம்?

2025-க்கான உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில், UAE முதலிடம் பிடித்துள்ளது. ஒரு பாஸ்போர்ட் மூலம் அதிகபட்சமாக எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும் என்பதை பொறுத்து, ஆர்டன் கேபிடல் நிறுவனம் இந்த பட்டியலை வெளியிட்டது. இதில் 2-ம் இடத்தில் சிங்கப்பூர், ஸ்பெயின் ஆகிய 2 நாடுகள் உள்ள நிலையில், இந்தியா 67-வது இடத்தில் உள்ளது. இந்திய பாஸ்போர்ட் மூலம் 59 நாடுகள் வரை விசா இல்லாமல் செல்லலாம்.
News December 11, 2025
விடுமுறை.. நாளை முதல் 3 நாள்களுக்கு HAPPY NEWS

வார விடுமுறையையொட்டி, மக்களின் வசதிக்காக அரசு சிறப்பு பஸ்களை அறிவித்துள்ளது. அந்த வகையில், நெரிசலின்றி ஊர்களுக்குச் செல்ல, நாளை முதல் டிச.14 வரை சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சுமார் 1,000 பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. இதுவரை 20,000 பேர் வரை டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். www.tnstc.in இணையதளம் (அ) TNSTC செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்து உங்கள் பயணத்தை ஈசியாக்குங்க நண்பர்களே!


