News November 7, 2025
ரூட்டை மாற்றும் ரிலையன்ஸ்

கச்சா எண்ணெயை சுத்திகரித்து பெட்ரோல், டீசலாக விற்று வந்த முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், தற்போது கச்சா எண்ணையையே விற்கத் தொடங்கியுள்ளது. மத்திய கிழக்கில் உள்ள தனது கச்சா எண்ணெய் சரக்கை கிரீஸ், இந்திய நிறுவனங்களுக்கு விற்றுள்ளது. ரஷ்ய எண்ணெய் மீது அமெரிக்கா விதித்துள்ள தடையில் இருந்து தப்பிக்க அல்லது புதிய பிசினஸ் உத்தியாக ரிலையன்ஸ் இந்த உத்தியை மேற்கொள்வதாக கூறப்படுகிறது.
Similar News
News February 6, 2026
மருக்களை ஒரே வாரத்தில் உதிர வைக்கும் வீட்டு வைத்தியம்

உடம்பு (அ) முகத்தில் இருக்கும் மருக்கள் உங்கள் அழகை குறைக்கிறதா? கவலையை விடுங்க. பூண்டை வைத்தே இந்த மருக்களை அகற்றலாம் என சொல்கின்றனர். இதற்கு, ஒரு பூண்டு பல் நசுக்கி, மருக்கள் மீது தடவி, அதனை பஞ்சை வைத்து மூடுங்கள். இதை தினமும் செய்து வந்தால், மருக்கள் கருப்பாகி 7 – 10 நாள்களுக்குள் உதிர்ந்து போகும் என்கின்றனர். இந்த வீட்டு வைத்தியத்தை அனைவரும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.
News February 6, 2026
வங்கி கடன் தள்ளுபடி.. சந்தோஷமான செய்தி வந்தாச்சு

தேர்தலையொட்டி, கூட்டுறவு <<19007011>>வங்கி கடன் தள்ளுபடி<<>> தொடர்பான வாக்குறுதிகள் வெளியாகத் தொடங்கிவிட்டன. இதனால், கூட்டுறவு வங்கிகளில் மக்கள் ஆர்வமுடன் கடன் பெற்று வருகின்றனர். 2025 டிசம்பர் வரை, கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட கடன் தொகை ₹85,000 கோடியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், திருமணம் உள்ளிட்ட குடும்ப செலவுகளுக்காக குறைந்த வட்டியில் ₹10 லட்சம் வரை கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாம்.
News February 6, 2026
ஒலிம்பிக் வீரர்கள் ஆணுறுப்பை பெரிதாக்குவதாக புகார்

2026 Winter Olympics ஸ்கை ஜம்பிங் வீரர்கள் மீது விசித்திரமான சர்ச்சை எழுந்துள்ளது. வீரர்கள் தங்கள் உடலுக்கு ஏற்ற இறுக்கமான உடைகளை தைக்க 3D ஸ்கேனுக்கு உட்படுத்தப்படுகின்றனர். உடையில் சிறிய இடைவெளி இருந்தாலும், காற்று உள்ளே நுழைந்து அதிக நேரம் மிதக்க உதவுகிறது. இதனால், பெரிய அளவு உடையை பெற, சில வீரர்கள் ஊசி மூலம் ஆணுறுப்பின் அளவை தற்காலிமாக அதிகரிப்பதாக ஜெர்மன் ஊடகம் குற்றம்சாட்டியுள்ளது.


