News December 22, 2025
ரீ-ரிலீஸில் கில்லி வசூலை முந்தாத படையப்பா

தமிழ் சினிமாவில் ரீ-ரிலீஸிலும் வசூல் ரீதியாகவும், ரசிகர்களின் பேராதரவுடனும் வெற்றி பெற்ற திரைப்படமாக ‘கில்லி’ உள்ளது. இந்நிலையில், ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ரீ-ரிலீஸான ‘படையப்பா’ படமும் முதல் நாள் வசூலில் கில்லியை முந்தியதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், கில்லியின் ரீ-ரிலீஸ் வசூல் ₹10 கோடியாக உள்ள நிலையில், படையப்பா ₹5 – ₹6 கோடியே வசூலிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News December 22, 2025
தேங்காய் எண்ணெய் உறைகிறதா? இதோ தீர்வு

குளிர்காலத்தில், தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்க்கலாம் என பாட்டிலை எடுத்தால் அது உறைந்து போய் இருக்கும். இதற்கு நீங்கள் எண்ணெய் பாட்டிலை கிச்சன் அடுப்பின் அருகில் வைக்கலாம். அங்கு சூடு தங்குவதால் எண்ணெய் உறையும் வாய்ப்பு குறைவு. அதேபோல, தேங்காய் எண்ணெயை Thermos பாட்டிலில் சேமியுங்கள். மேலும், தேங்காய் எண்ணெயுடன் ஆலிவ் எண்ணெயை கலந்து வைத்தால் அது உறைந்து போவதை தடுக்க முடியும்.
News December 22, 2025
காங்கிரஸ் பொண்ணு, BJP பையன்.. கட்சியை கடந்த காதல்!

இருவேறு சித்தாந்தங்கள், இருவேறு கொள்கைகள் என எதிர்திசையில் இருந்தாலும், இன்று காதல் அவர்களை ஒன்றிணைத்துவிட்டது. ம.பி.,யின் Ex அமைச்சர் தீபக் ஜோஷி(63), பல்லவி ராஜ் சக்சேனா(43) என்ற பெண்ணை சமீபத்தில் திருமணம் செய்துள்ளார். இதிலென்ன விஷேசம் உள்ளது என கேட்கலாம். தீபக் பாஜகவை சேர்ந்தவர், பல்லவி காங்கிரஸின் மாநில பொதுச்செயலாளராக இருந்தவர். காதல் வர நினைத்துவிட்டால், எந்த விஷயமும் ஒரு தடையில்லையே!
News December 22, 2025
விஜய் எப்படி இதை செய்தார்.. வியப்பில் ரோஜா

ஈரோட்டில் இவ்வளவு பெரிய கூட்டத்தை பார்க்கும்போது நிஜமாகவே ஷாக்காக இருந்தது என நடிகையும், அரசியல்வாதியுமான ரோஜா கூறியுள்ளார். தவெகவில் பெரிய ஆளுமைகள் இல்லாதபோதும், இதனை விஜய் எப்படி செய்தார் என்பது தனக்கு புரியவே இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் விஜய்யிடம் ஒரு விஷயத்தை எதிர்பார்க்கிறார்கள், அதை அவர் புரிந்துகொண்டு கொடுக்கும்போது தான் மக்களின் ஆதரவு கிடைக்கும் என்றார்.


