News December 15, 2025

ரீசார்ஜ் பிளானில் மாற்றம் செய்தது ஏர்டெல்..!

image

5ஜி பூஸ்டர் பேக்குகளின் டேட்டாவை ஏர்டெல் நிறுவனம் கணிசமாக குறைத்துள்ளது. அதன்படி, ₹51, ₹101, ₹151 போன்ற Add-on பேக்குகளில் முன்பு கிடைத்த 3 GB, 6 GB, 9 GB டேட்டா, தற்போது 1 GB, 2 GB, 3 GB ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஏர்டெலின் இந்த திடீர் அறிவிப்பு அறிவிப்புக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதேபோல், வேறு சில பேக்குகளின் பெனிபிட்களும் குறைக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.

Similar News

News December 22, 2025

மத்திய பட்ஜெட்டில் உங்கள் ஐடியாக்களை கூறலாம்!

image

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் 2026 – 2027, அடுத்த ஆண்டு பிப்.1-ல் தொடங்கவுள்ளது. இந்நிலையில், மத்திய பட்ஜெட் 2026-27-ல் வரவேண்டிய முக்கிய அம்சங்கள், திட்டங்கள் குறித்து பொதுமக்கள் கருத்துகளை பகிரலாம் என அரசு அழைப்பு விடுத்துள்ளது. எனவே, நாட்டின் முன்னேற்றத்திற்கு உங்களின் கருத்துகள் மூலம் பங்களிக்க விரும்புவோர், இங்கே <>கிளிக்<<>> செய்து பதிவிடுங்கள். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

News December 22, 2025

CM விவகாரத்தை அவர்களே தீர்க்க வேண்டும்: கார்கே

image

கர்நாடக CM இருக்கைக்கான மோதல்போக்கு தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், காங்., மேலிடத்தின் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று CM சித்தராமையா & DCM சிவக்குமார் என இருவருமே கூறி வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரத்தில் மாநில தலைவர்களே பேசி தீர்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று காங்., தேசிய தலைவர் கார்கே கூறியுள்ளார். இதனால் விரைவில் இருவரும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என கூறப்படுகிறது.

News December 22, 2025

இந்தியா ஒரு இந்து நாடு: மோகன் பகவத்

image

பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சாதி அமைப்பு இந்துத்துவாவின் முத்திரை அல்ல என்று RSS தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். இந்தியா ஒரு இந்து நாடு என்ற அவர், இதற்கும் அரசியல் ஒப்புதல் தேவையா என்றும் கேள்வி எழுப்பினார். இந்தியாவை தாய்நாடாக கருதுபவர்கள் இந்திய கலாச்சாரத்தைப் பாராட்டுகிறார்கள். நாட்டின் மூதாதையர்களின் மகிமையை நம்பும் ஒரு நபர் உயிருடன் இருக்கும் வரை, இந்தியா ஒரு இந்து நாடு என்றார்.

error: Content is protected !!