News January 24, 2025
ரிஷிவந்தியம் முன்னாள் எம்.எல்.ஏ உயிரிழப்பு

ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் கடந்த 1991 முதல் 1996 வரை அதிமுக சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்த அத்தியூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜீலு என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (ஜன.24) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். ஷேர் செய்யவும்..
Similar News
News September 12, 2025
தலைமை காவலர் ஆயுதபடைக்கு மாற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்த செல்வகுமார் வாணியங்குப்பம் கெடிலம் ஆற்றில் நடந்த மணல் கடத்தலை தடுக்க தவறியது விசாரணையில் தெரியவந்தது. மணல் கடத்தலுக்கு அவர் உடந்தையாக இருந்தது குறித்து எஸ்.பி.மாதவன் நடத்திய விசாரணையில் இது உறுதியானது. இதனை அடுத்து செல்வகுமாரை இன்று ஆயுதப்படைக்கும் மாற்றி எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.
News September 12, 2025
இரவு நேர ரோந்து பணி- மாவட்ட காவல்துறை அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (செப்.,12) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 12, 2025
கள்ளகுறிச்சி: தொழில் தொடங்க ரூ.75 லட்சம் வரை மானியம்

தொழில் தொடங்க அரசு நீட்ஸ் திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி வரை கடனுதவி வழங்கி வருகிறது. இதில் ரூ.75 லட்சம் திரும்ப செலுத்த தேவையில்லை(25%மானியம்). தொழிலுக்கான முழுமையான திட்டமிடலுடன் விண்ணபிக்க வேண்டும்.பொது பிரிவினர் தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதம் மற்றும் பிற பிரிவினர் 5 சதவீதம் செலுத்த வேண்டும். 21-35 வயதிற்குட்பட்டவர்கள் <