News April 28, 2024

ராயக்கோட்டை பகுதியில் பலாப்பழம் விளைச்சல்

image

ராயக்கோட்டை பகுதியில் மழையின்மையால் கடும் வறட்சி நிலவி வருகிறது. இந்நிலையில் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையில் விவசாய சாகுபடியான காய்கறிகள், பூக்கள் மற்றும் கொத்தமல்லி, புதினா போன்றவை பசுமையாக காட்சியளிக்கிறது. தென்னை, மா, பலா போன்ற மரங்களும் நல்ல பலனை கொடுத்து வருகிறது. பலா மரங்களில் பலா காய்கள் கொத்து, கொத்தாக காய்த்துள்ளதால் பாரப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது.

Similar News

News August 23, 2025

கிருஷ்ணகிரி: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

image

இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? அதற்கு முதலில், www.tnesevai.tn.gov.in , என்ற தமிழக அரசின் இ-சேவை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். புகைப்படம், கல்வி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சமர்பித்து விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News August 23, 2025

கனமழை: சாலைகளில் வெள்ளம்; போக்குவரத்து நெரிசல்.

image

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நள்ளிரவு முதல் வெளுத்தெடுத்த கனமழையினால், சாலைகளில் வெள்ளம் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் ஒரு அடிக்கு மேலாகத் தேங்கிய மழைநீர் காரணமாக, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் செல்ல வழியின்றி போக்குவரத்து ஓட்டுநர்களும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

News August 22, 2025

கிருஷ்ணகிரி மக்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரத் துறை சார்பில், அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் உட்பட 56 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கு இந்த <>இணையதளத்தில் <<>>விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து ஆகஸ்ட் 25-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

error: Content is protected !!