News March 21, 2024
ராம்நாடு: 3 ரவுடிகள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மரக்குளம் சுந்தரபாண்டி மகன் பாலமுருகன் (28), விருதுநகர் மாவட்டம் அம்மன்பட்டி வெற்றிவேல் மகன் விக்னேஸ்வரன் (26), முதுகுளத்தூர் மூலக்கரைபட்டி கிருஷ்ணன் மகன் மலை கண்ணன் (26). இவர்கள் 3 பேரும் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததை ஒட்டி இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி சந்தீஷ் பரிந்துரையின்பேரில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் நேற்று அதற்கான உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News February 10, 2026
ராமநாதபுரம்: உங்க வீட்ல குழந்தைகள் இருக்கா?

ராமநாதபுரம் மக்களே, உங்கள் வீட்டில் 5 வயதுக்கும் குறைவான குழந்தைகள் இருந்தால், பால் ஆதார் எடுக்க வேண்டும். கல்வி, பிற தேவையின் போது ஆதார் அவசியமாகும். இதற்காக நீங்க அலைச்சல் இல்லாமல் வாங்க எளியவழி உள்ளது. இங்கு <
News February 10, 2026
ராமநாதபுரம்: ஊர்க்காவல் படையில் வேலை!

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊர்க்காவல் படை & மீனவ இளைஞர் கடலோர பாதுகாப்பு படைக்கு ஆட்கள் தேர்வு. ஊர்க்காவல் படையில் (2 பெண்கள்) 52 பேரும், கடலோர பாதுகாப்பு படையில் 40 இளைஞர்களும் தேர்வு செய்யப்படுவர். 18-50 வயது – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கம் அருகில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் 14ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். (பிப்.18 – தேர்வு) SHARE
News February 10, 2026
ராமேஸ்வரம் கோவில் நடை அடைப்பு

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கடந்த பிப் 6ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பிக்கப்பட்டது. திருவிழாவின் 3-ம் திருநாளான இன்று பிப்-10 ம் தேதி சுவாமி அம்பாள் கெந்தமாதனபர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஆதலால், காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை கோவில் நடை அடைக்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


