News August 8, 2025
ராம்நாடு: 12th படித்தால் ரூ.15,000 சம்பளம்!

ராமநாதபுரத்தில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் வணிக மேம்பாட்டு நிர்வாகி பணிக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க 12ம் வகுப்பு படித்திருந்தால் போதும். முன் அனுபவம் தேவையில்லை. ரூ.15,000 வரை சம்பளம் வழங்கப்படும். <
Similar News
News August 9, 2025
ராமநாதபுரம் இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரம்

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை, சார்பில் இன்று (ஆகஸ்ட் 8) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கமுதி, பரமக்குடி, ராமேஸ்வரம், முதுகுளத்தூர் உட்கோட்டத்தில் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளனர். இரவு நேரங்களில் அவசர தேவைகளுக்கு, பொதுமக்கள் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்கள் மூலம் காவல்துறையை தொடர்புகொண்டு உதவி பெறலாம்.
News August 8, 2025
முதுகுளத்தூர் அரசு ஐடிஐ-இல் சேர்க்கை ஆரம்பம்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின் பயிற்சியாளர்களின் 2025ஆம் ஆண்டுக்கான சேர்க்கை ஆரம்பித்துள்ளது. இதற்காக துண்டு பிரசுரங்களை செங்கப்படை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் நேரடியாக கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
News August 8, 2025
ராம்நாடு விவசாயிகள் மானியம் பெற ஆட்சியர் அழைப்பு

2025-26ம் ஆண்டு தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ், மின்சாரத்தினால் இயங்கும் புல்வெட்டும் கருவிகள், அரசினால் 50 சதவீத மானியத்தில், 50 பயனாளிகளுக்கு மாவட்டத்தில் வழங்கப்படவுள்ளது. விவசாயிகள் தங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரை அணுகி கால்நடை விபரம், தீவன சாகுபடி விபரம், நில சர்வே எண் கூடிய விண்ணப்பத்தினை சமர்பித்து பயன் பெறலாம் என ஆட்சியர் சிம்ரன் ஜித் கூறியுள்ளார்.