News March 19, 2024
ராம்நாடு: விளம்பரங்கள் அழிக்கும் பணி தீவிரம்

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. அதன்படி, ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சாலையோரங்களில் வைக்கப்பட்டிருக்கும் அரசியல் சம்பந்தமான விளம்பரங்கள் மற்றும் பேனர்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். வருவாய்த்துறையினர், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பரக்கத்துல்லா தலைமையில் சுவர் விளம்பரங்கள் பேனர்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.
Similar News
News February 11, 2026
இராமநாதபுரம்: 2.5 வயது குழந்தை பலியான சோகம்!

கடலாடி அருகே சிக்கல் மேற்கு தெருவைச் சேர்ந்த சரத்பாபு–நதியாதேவி தம்பதியின் மகன் அர்னிஷ்(2.5) திங்கள்கிழமை மாலை வீட்டருகே பெட்டிக்கடை முன்பு விளையாடிக் கொண்டிருந்த போது, கடை சரிந்து அவர் மீது விழுந்தது. பலத்த காயமடைந்த சிறுவனை கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சம்பவம் குறித்து சிக்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News February 11, 2026
ராம்நாடு: ஒரே நாளில் இருவர் மீது பாய்ந்த குண்டாஸ்

இராமநாதபுரம் மாவட்டம் R.S.மங்கலம் பகுதியில் வயதானவர்களை குறிவைத்து வழிப்பறி சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த வெள்ளைச்சாமி மற்றும் அய்யப்பன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் அவர்களின் செயல்கள் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கருதி குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.