News May 27, 2024
ராம்நாடு: வாக்கு எண்ணும் மையத்தில் எஸ்ஐ மரணம்

ராமநாதபுரம் மாவட்டம்
புல்லந்தையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பரமக்குடி தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் நேற்று நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கினார். இதையடுத்து, அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
Similar News
News March 7, 2026
இராம்நாடு: புதிய அதிமுக பெண் மாநில நிர்வாகிக்கு வாழ்த்து

அதிமுக மாநில மகளிரணி இணைச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள லீமா ரோஸ் மார்ட்டினை அதிமுக இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமி, மாநில மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி, மாநில அம்மா பேரவை இணை செயலாளர் சதன் பிரபாகர், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில இணைச்செயலாளர் நாகேந்திர சேதுபதி, பரமக்குடி நகர் செயலாளர் வின்சென்ட் ராஜா ஆகியோர் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
News March 7, 2026
இராம்நாடு: கர்ப்பிணி & கணவருக்கு நேர்ந்த கொடுமை

திருவாடனை அருகே மங்கலக்குடி பேராமங்கலம் பகுதியில் ஆடு மேய்க்கும் தொழிலில் கொத்தடிமைகளாக இருந்த தஞ்சாவூரை சேர்ந்த 5 மாத கர்ப்பிணி பெண் மற்றும் அவரது கணவர் மீட்கப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் நடத்திய விசாரணையில், ரூ.1 லட்சம் முன்பணம் பெற்று 8 மாதங்களாக குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய வைத்ததும், ஊருக்கு செல்ல அனுமதிக்காததும் தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் தம்பதியை மீட்டனர்.
News March 7, 2026
இராமேஸ்வரத்தில் தவெகவினர் பிரச்சாரம்

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் நகர் 21-வது வார்டு கரையூர் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னமான விசில் சின்னத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக வீதி வீதியாக சென்று பொதுமக்களுக்கு விசில் சின்னம் வழங்கி பிரச்சாரம் செய்தனர். இந்நிகழ்வில் தமிழக வெற்றி கழகத்தின் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் மலர்விழி ஜெயபாலா மற்றும் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


