News November 3, 2025
ராம்நாடு: வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம்

ராமநாதபுரம் மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாறுதல் செய்து கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் ஆணையிட்டுள்ளார். திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) கோட்டை இளங்கோவன், மண்டபம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வ.ஊ.) ராமநாதபுரம் உதவி இயக்குநர் (தணிக்கை) அலுவலக கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் போகலூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News November 3, 2025
ராம்நாடு: பட்டா வைத்திருப்பவர்களுக்கு நற்செய்தி!

ராம்நாடு மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 04657 230657 அணுகலாம். SHARE பண்ணுங்க.
News November 3, 2025
ராம்நாடு: வடகிழக்கு பருவமழை – ஆட்சியர் அறிவுரை

ராம்நாடு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; வடகிழக்கு பருவ மழைக் காலங்களில் எதிர்பாராத மின்னல் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அலைபேசி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மக்கள் வானிலை முன்னறிவிப்பு குறித்து தெரிந்து கொள்ள TN Alert, Sachet செயலிகளை அலைபேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். மரங்களுக்கு அடியில் நிற்க கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.
News November 3, 2025
ராம்நாடு: B.E படித்தவர்களுக்கு வேலை ரெடி!

ராம்நாடு மக்களே, மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர துறையின் கீழ் தேசிய சிறுதொழில் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 45வயதுகுட்பட்ட B.E., B.Tech., CA., CMA., MBA..டிகிரி படித்தவர்கள் <


