News November 20, 2025
ராம்நாடு: ரூ.40 லட்சம்.. கடல் அட்டைகள் கடத்தல்?

கீழக்கரை புது கிழக்கு தெரு பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகளை இலங்கைக்கு கடத்துவதற்காக வைத்திருந்ததாக கீழக்கரை போலீசார் வனத்துறையினரிடம் இணைந்து மொட்டை மாடியில் சோதனை நடத்தினர். அப்போது பதப்படுத்தப்பட்ட 400 கிலோ கடல் அட்டைகள் 13 மூட்டைகளில் இருந்தன. இதன் மதிப்பு ரூ.40 லட்சம் எனவும் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கடல் அட்டைகள் கீழக்கரை வனச்சரகத்தில் ஒப்படைக்கப்பட்டன.
Similar News
News November 21, 2025
ஆன்லைனில் இழந்த பணத்தை மீட்ட காவல்துறை

இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கௌதம்துரை என்பவர் டெலிகிராமில் வந்த பகுதி நேர வேலை வாய்ப்பு விளம்பரத்தை நம்பி பணத்தை இழந்ததாக இராமநாதபுரம் சைபர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சைபர் கிரைம் போலீசாரால் மீட்கப்பட்ட 3.5 லட்சம் ரூபாய் பணத்தை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் உரிய நபரிடம் வழங்கினார்.
News November 21, 2025
BIG BREAKING பரமக்குடி மாணவி கூட்டு பாலியல் வழக்கில் தீர்ப்பு

பரமக்குடியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் அதிமுக கவுன்சிலர் சிகாமனி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று இறுதி தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் 5 பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
News November 21, 2025
ராம்நாடு: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

ராம்நாடு மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே இங்கே<


