News November 10, 2025
ராம்நாடு: போலீஸ் எழுத்துத் தேர்வு: 714 பேர் ஆப்சென்ட்

தமிழ்நாடு முழுவதும் 2ம் நிலைக் காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நேற்று காலை நடந்தது. ராமநாதபுரம் 4, பரமக்குடி, கீழக்கரை தலா 1 என 6 மையங்களில் தேர்வு நடந்தது. 1,344 பெண்கள் உள்பட 6,522 விண்ணப்பித்தனர். இன்று நடந்த தேர்வில் 1,178 பெண்கள் உள்பட 5,808 பங்கேற்றனர். 168 பெண்கள் உள்பட 714 பேர் பங்கேற்கவில்லை. இத்தேர்வு மையங்களை எஸ்பி சந்தீஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Similar News
News November 9, 2025
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் (நவ. 9) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
News November 9, 2025
ராம்நாடு: ஓடும் பேருந்தில் நடத்துனருக்கு மாரடைப்பு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இன்று கரூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ராமேஸ்வரம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் நடத்துனராக பணியில் இருந்தார். இந்நிலையில் பேருந்து பார்த்திபனூர் அருகே வந்த பொழுது நடத்துவதற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு ஓடும் பேருந்திலேயே பலியானார். பின், அவரது உடல் பரமக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
News November 9, 2025
ராம்நாடு: மின்தடை தேதிகள் அறிவிப்பு

மண்டபம் துணை மின் நிலையத்தில் நவ. 11-ல் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால், அரியமான், சுந்தரமுடையான், வேதாளை, மரைக்காயர்பட்டிணம், மண்டபம், பாம்பன், அக்காள்மடம், தங்கச்சிமடம், அரியாங்குண்டு, ராமேஸ்வரம், வடகாடு, வேர்க்கோடு, புதுரோடு, சம்பை, ஓலைக்குடா பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல உப்பூர் (நவ. 11), கமுதி (நவ. 26) ஆகிய பகுதிகளிலும் மின்தடை தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


