News January 24, 2026
ராம்நாடு: பெரியப்பாவை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை!

முதுகுளத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட கூவர் கூட்டம் கிராமத்தை சேர்ந்தவர் முருகவேல் (39). இவர் இடப்பிரச்சனை காரணமாக 2021ம் ஆண்டு தனது பெரியப்பா முனியசாமியை (85) கொலை செய்தார். இதுகுறித்த புகாரின் பேரில் இளஞ்செம்பூர் போலீசார் முருகவேலை கைது செய்தனர். இது தொடர்பாக பரமக்குடி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இந்நிலையில் முருகவேலுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி பாலமுருகன் தீர்ப்பு அளித்தார்.
Similar News
News January 29, 2026
இராம்நாடு: கல்லூரியில் சேர ரூ.40,000 உதவித்தொகை!

இராம்நாடு மாவட்ட மக்களே.., உங்கள் குழந்தைகள் கல்லூரியில் சேர ரூ.40,000 வரை உதவித்தொகை பெறுவதற்கான திட்டம் ‘எல்.ஐ.சி கோல்டன் ஜூப்லீ ஸ்காலர்ஷிப்’. 10, +2-வில் 60% மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும். மருத்துவம், பொறியியல், டிகிரி, டிப்ளமோ போன்ற எல்லா படிப்பிற்கும் ஏற்ற உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன. விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க இங்கே <
News January 29, 2026
ராம்நாடு: ரூ.58,000 சம்பளத்தில் அரசு வேலை ரெடி., தேர்வு இல்லை!

தமிழ்நாடு சுகாதார துறையில் (TN MRB) காலியாக உள்ள 999 Nursing Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. இதற்கு சம்பளம் ரூ.15,700 – ரூ.58,100 வரை வழங்கப்படும். 10th, Nursing Assistants course முடித்தவர்கள் பிப்.8க்குள்<
News January 29, 2026
ராமேஸ்வரத்தில் தரிசனம் செய்ய தடை!

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் பிப். 1ம் தேதி தைப்பூசத் திருவிழா நடைபெற உள்ளது. அன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, படிலிங்க தரிசனம் நடைபெற்று, பூஜைகள் நடைபெறுகின்றன. 11 மணியளவில் சாமி – அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளுகின்றனர். இதனை தொடர்ந்து 11 மணி முதல் இரவு வரை பக்தர்கள் தீர்த்த கிணறுகளில், சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


