News June 14, 2024

ராம்நாடு: புதுப்பிக்கப்பட்ட யூனிமோனி கிளை துவக்கம்

image

இராமநாதபுரத்தில் Unimoni Financial Services Ltd எனும் அந்நியச் செலாவணி மற்றும் பணப் பரிமாற்ற சேவை வழங்கும் நிறுவனம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை எதிரில் தனது புதுப்பிக்கப்பட்ட கிளையைத் துவங்கியது. இதனை தலைமை மக்கள் அதிகாரி ரத்தீஷ் திறந்து வைத்தார்.
திருநெல்வேலி மண்டல தலைவர் கார்த்திகேயன், கிளை மேலாளர் கார்த்திக்ராஜா முன்னிலை வகித்தனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

Similar News

News March 2, 2026

ராம்நாடு: அதிமுக – பாஜகவை நம்பக்கூடாது; MP

image

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில், திமுக சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழச்சி தங்கபாண்டியன் MP கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, பாஜக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகள் பொய்யான வாக்குறுதிகள் அளித்து வருவதாகவும், அதை யாரும் நம்பக்கூடாது எனவும், தமிழகம் கல்வியில் சிறந்து விளங்குவதாக தெரிவித்தார். உடன் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News March 2, 2026

ராம்நாடு: இளம்பெண் தற்கொலையில் பகீர் திருப்பம்.!

image

உச்சிப்புளியை சேர்ந்தவர் சசிகலா (27). இவர் பாண்டி என்பவரை காதலித்த நிலையில், முருகன் என்பவருடன் திருமணமானது. காதல் கைகூடாததால் ஜன.17 ம் தேதி தற்கொலை செய்ததாக கூறப்பட்டது. இது குறித்து காவல்துறை நடத்திய ரகசிய விசாரணையில், வெளிநாட்டில் இருந்து வந்த சசிகலாவின் சகோதரர் அஜித், பாண்டியுடனான காதலை கைவிட கூறி தகராறு செய்ததும், இதில் அஜித் சசிகலாவை துணியால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததும் தெரியவந்துள்ளது.

News March 2, 2026

இராமநாதபுரம் இரவு ரோந்து காவல்துறை பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மார்ச்.01) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!