News June 4, 2024
ராம்நாடு: பன்னீர்செல்வங்களை முந்திய நோட்டா

இராமநாதபுரம் தொகுதியில் ஒரு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஒ.பன்னீர்செல்வங்கள் 4 பேர், ம.பன்னீர் செல்வம் ஒருவர் என மொத்தம் 6 பன்னீர்செல்வங்கள் போட்டியிட்ட நிலையில் ஒச்சத்தேவர் பன்னீர் 100, ஒய்யாரம் பன்னீர் 209, ஒய்யாத்தேவர் பன்னீர் 276,
ஒச்சப்பன் பன்னீர் 530, ம.பன்னீர் 410 வாக்குகள் பெற்றுள்ளனர். ஆனால் நோட்டா 1211 வாக்குகள் பெற்று 5 பன்னீர்செல்வங்களை பின்னுக்கு தள்ளி நோட்டா முன்னிலையில் உள்ளது.
Similar News
News September 12, 2025
பாம்பன் பால ரயில் மின் பாதை நாளை ஆய்வு

ராமநாதபுரம் ராமேஸ்வரம் இடையே ரயில் புதிய மின் பாதையில் சிறப்பு ரயில் இயக்கி தெற்கு ரயில்வே முதன்மை தலைமை மின் பொறியாளர் கணேஷ் நாளை (செப்.13) ஆய்வு செய்ய உள்ளார். நாளை காலை 10:15 மணிக்கு துவங்கும் இந்த ஆய்வு மதியம் 1:45 மணியளவில் நிறைவடைகிறது. இக்கால கட்டத்தில் பாதுகாப்பு கருதி தண்டவாளத்தை பொதுமக்கள் கடக்கவோ, அருகிலோ செல்ல வேண்டாம் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
News September 12, 2025
இனிமேல் ராமநாதபுரம் டூ மைசூரு போரது சுலபம்

ராமநாதபுரம்-மைசூரு இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. மைசூருவிலிருந்து ராமநாதபுரத்திற்கு செப்.,15 முதல் அக்.,27 வரை திங்கள் கிழமை தோறும் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் மாண்டியா, பெங்களூரு, ஓசூரு, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, மானாமதுரை, பரமக்குடி வழியாக இயக்கப்படும்.மறு மார்க்கத்தில் ராமநாதபுரத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை தோறும் சிறப்பு ரயில் இயக்கப்படும். SHARE IT
News September 12, 2025
ராமநாதபுரம்: வாகன அபராதங்களுக்கு முழு தள்ளுபடி

ராமநாதபுரம் மக்களே வரும் 13ம் தேதி தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள டிராபிக் பைன்கள் முழுமையாக தள்ளுபடி அல்லது 50% வரை குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றது, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாத உள்ளிட்ட 13வகையான அபராதங்களுக்கு தள்ளுபடி பெறலாம். இதற்கு டோக்கன் பதிவு செய்ய <