News September 29, 2025

ராம்நாடு: நெடுந்தூர ஓட்டப் போட்டி – 205 பேர் பங்கேற்பு

image

ராமநாதபுரத்தில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி இன்று நடந்தது. 205 பேர் பங்கேற்ற போட்டியை எஸ்பி சந்தீஷ் துவக்கி வைத்தார். 17- 25 வயது ஆடவர் பிரிவில் ராமர், பால்ஜோஸ்வா, வீரராகவன், 25 வயதிற்கு மேற்பட்டோர் ஆடவர் பிரிவில் முனியசாமி, பிரசாந்த், ராம்குமார், 17- 25 வயது மகளிர் பிரிவில் மோனிகா, சர்மிளா ஹேமலதா, 25 வயது மகளிர் பிரிவில் ராதா, கிருஷ்ணவேணி, கனிமொழி ஆகியோர் முதல் 3 இடம் பிடித்தனர்.

Similar News

News December 10, 2025

ராமநாதபுரம்: ரேஷன் கார்டு ONLINEல APPLY பண்ணுங்க!

image

1. இங்கு <>க்ளிக்<<>> செய்து ரேஷன் கார்டு விண்ணப்ப படிவத்தில் பெயர், விவரங்கள் நிரப்புங்க.
2. ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வீட்டு வரி ரசீது ஸ்கேன் செய்து இணையுங்கள்.
3.பூர்த்தி செய்யபட்ட படிவம், ஆவணங்களை இணையுங்க.
4. விண்ணப்ப நிலை சரி பாருங்க.. 60 நாட்களில் ரேஷன் கார்டு உங்கள் கையில்.!
இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க!

News December 10, 2025

ராமநாதபுரம்: சிறுமி கர்ப்பம்., இளைஞர் மீது போக்சோ!

image

தொண்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், ஆரியமணி (20) என்ற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுமிக்கு உடல் பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு சென்றுள்ளனர், அங்கு அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் திருவாடனை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். திருவாடனை போலீஸார் ஆரியமணி மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

News December 10, 2025

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை!

image

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் லேசான முதல் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (டிச 10) ராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி, தென்காசி, குமரி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதனை எலோருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!