News September 28, 2025

ராம்நாடு: நீங்களும் ஆகலாம் தொழிலதிபர்! கிளிக் பண்ணுங்க

image

தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் ஆவின் மூலம் பால்வளத்துறையில் 3 மாத பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், பால் சேகரிப்பு, செயற்கை கருவூட்டல், தொழில்முனைவோர் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கபடுகிறது. பங்கேற்க 8, 12ம் வகுப்பு படித்திருந்தால் போதும். குறிப்பிட்ட நபர்களுக்கு ரூ.12,000 வரை உதவி தொகை வழங்கபடுகிறது.<> இங்கு கிளிக் <<>>செய்து பயிற்சி பற்றிய விவரங்களை அறியலாம். SHARE பண்ணுங்க.

Similar News

News February 4, 2026

இராம்நாடு: சமையல் சிலிண்டர் வாங்குவோர் கவனத்திற்கு!

image

இராம்நாடு மக்களே, உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை தாண்டி அதிகம் பணம் கேட்பதை தடுக்க கேஸ் நிறுவனங்கள் வழி செய்துள்ளது. Indane: 75888 88824, HP Gas: 92222 01122, Bharat Gas: 1800 22 4344. இந்த எண்களில் Gpay, Phonepe, Whatsapp மூலமா உங்க சிலிண்டர் பில் பணத்தை செலுத்துங்க.. இனிமேல் சிலிண்டர் போட வருபவர்களால் அதிக பணம் கேட்க முடியாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

News February 4, 2026

முதுகுளத்தூரில் மின்கம்பம் மீது மோதி கார் விபத்து

image

முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை அருகே உயர்மின் அழுத்த மின்கம்பம் உள்ளது. அவ்வழியாக மதுரையில் இருந்து முதுகுளத்தூர் அருகே பூக்குளம் கிராமத்திற்கு செல்வதற்காக சேதுராமன் என்பவர் சொகுசு காரில் வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தூக்க கலக்கத்தில் உயர் மின்னழுத்த மின்கம்பம் மீது சொகுசு கார் மோதி விபத்து ஏற்பட்டது விபத்து குறித்து முதுகுளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News February 4, 2026

ராம்நாடு: தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

image

செகுடி கிராமத்தை சேர்ந்த கணேசன் மகன் விஜய காந்த் (40) என்பவர் திருப்பூரில் வசித்து வந்தார். அங்கு குடும்பத்தில் ஏற்பட்ட கடன் பிரச்சனை காரணமாக சொந்த ஊருக்கு திரும்பி வந்து பிப்.4ல் செகுடி காளி கோவில் அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவாடனை காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடல் திருவாடானை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

error: Content is protected !!