News November 10, 2025
ராம்நாடு: தையல் எந்திரம் பெற ஆட்சியர் அழைப்பு

ராம்நாடு மக்களே, மாவட்ட ஆட்சியர் ரஞ்சீத்சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் தையல் பயிற்சி பெற்ற முன்னாள் படைவீரர் மனைவி, கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்களுக்கு இலவச தையல் எந்திரம் வழங்கப்படுகிறது. ராமநாதபுரம் அலுவலகத்திற்கு நேரில் உரிய ஆவணங்களுடன் நவ. 25க்குள் வருகை தந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News November 10, 2025
ராம்நாடு: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

ராம்நாடு மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும். மீறினால் ராம்நாடு வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000472, 9445000473 என்ற எண்களில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்யவும்.
News November 10, 2025
ராம்நாடு: மானியம் பெற ஆட்சியர் அழைப்பு

பிரதமர் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கொடுவா மீன் வளர்ப்பு குளம், 30 மற்றும் 50 டன் உற்பத்தி திறன் கொண்ட பனிக்கட்டி நிலையம், ஒருங்கிணைந்த அலங்கார மீன் வளர்ப்பு நிலையம் அமைப்பதற்கும் மானியம் வழங்கப்படுகிறது. மீனவர்கள் மற்றும் மீனவ பெண்கள் தங்கள் பகுதியில் அமைந்துள்ள மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
News November 10, 2025
ராம்நாடு: டிகிரி போதும்., ரயில்வேயில் சூப்பர் வேலை!

ராம்நாடு மக்களே, இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Ticket Supervisor, Station Master உள்ளிட்ட 5810 பணியிடங்களக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் நவ 20க்குள் இங்கு <


