News January 9, 2026

ராம்நாடு: தேர்வு இல்லை.. ரூ.56,100 சம்பளத்தில் ARMY வேலை

image

இந்திய ராணுவத்தில் SSC (Technical) பிரிவில் 381 காலியிடங்கள் உள்ளன. இதற்கு ஆண்/பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். BE., B.Tech ல் ஏதேனும் ஒரு பிரிவில் பயின்றவர்கள் பிப்.5 க்குள் இந்த <>லிங்கை<<>> கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை வழங்கப்படும். தேர்வு கிடையாது. மதிப்பெண் மற்றும் நேர்காணல் மூலம் பணி வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE

Similar News

News February 13, 2026

ராமநாதபுரம்: ரயில்வே தேர்வுக்கு இலவச பயிற்சி

image

ராமநாதபுரத்தில் ரயில்வே தேர்வு வாரியத்தின் குரூப் D தேர்விற்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் பிப்16ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெற உள்ளது. பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் மையத்திற்கு நேரில் சென்றோ அல்லது 04567- 230160 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிக்கை.

News February 13, 2026

ராமநாதபுரம் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளர் பலி

image

மே.வங்க மாநிலம் சுங்புரி பகுதியைச் சேர்ந்த தொழிலாளி சக்தி படாதாஸ் என்பவர் நயினார் கோயில் அருகே சிறகிக்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் செங்கல் சூளையில் தனது மகனுடன் நேற்று (பிப் 11) காலை வேலை செய்து வந்துள்ளார். அப்போது எதிர்பாரவிதமாக செங்கல் அறுக்கும் இயந்திரத்துக்குள் விழுந்த சக்தி படாதாஸ் இயந்திரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து நயினார்கோவில் போலீசார் விசாரணை.

News February 13, 2026

பெண்ணிடம் 8 சவரன் தங்க நகை பறிப்பு

image

பரமக்குடி அருகே அரியனேந்தல் போக்குவரத்து நகரை சேர்ந்த ஜெயபாரதி ரியல் எஸ்டேட் புரோக்கராக பணிபுரிந்து வருகிறார். இன்று இவரிடம் முன் அறிமுகம் இல்லாத இருவர் 2 நாட்களாக நிலம் வாங்குவது குறித்து போனில் பேசி வந்துள்ளனர். இந்நிலையில் அவரது வீட்டிற்கு வந்து நிலம் வாங்குவது தொடர்பாக பேசி அவரை தாக்கி கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் தங்க நகை திருடியுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!