News October 17, 2025
ராம்நாடு: தீயணைப்பு நிலையத்தில் சிக்கிய ரூ.35,000

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர். இதில், பட்டாசு பாக்ஸ்கள் மற்றும் ரூ.35,300 பணம் சிக்கியது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ராமச்சந்திரன் கூறுகையில், தீயணைப்பு நிலைய அலுவலர் குணசேகரன் (50) மற்றும் மற்ற அலுவலர்களிடம் விசாரணை தொடர்வதாக தெரிவித்துள்ளார்.
Similar News
News October 18, 2025
ராம்நாடு: மழை வெள்ளம் பாதிப்புகள்.. புகார் எண்கள்!

ராமநாதபுரத்தில் அநேக இடங்களில் அடைமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் உங்கள் பகுதியில் மழையால் ஏற்படும் பாதிப்புகளான, வெள்ளம், மின்தடை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் குறித்து தகவல் தெரிவிக்க இந்த எண்ணை Save பண்ணிக்கோங்க மாநில உதவி எண் – 1070, மாவட்ட உதவி எண்- 1077, அவசர மருத்துவ உதவி – 104 என்ற எண்கள் மழைக்காலங்களில் தேவைப்படலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News October 18, 2025
ராம்நாடு: மழைக்கால உதவி.? உடனே CALL பண்ணுங்க..

பருவமழை தொடங்கியுள்ள நேரத்தில் பொதுமக்களின் அவசரகால தேவைகளுக்கு மாவட்ட கலெக்டர் உதவி எண்களை அறிவித்துள்ளார். இது கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும். மாவட்ட பேரிடர் கட்டுப்பாட்டு மைய கட்டணமில்லா தொலைபேசி எண் 1077-ல் எ (அ) பேரிடர் மேலாண்மைப்பிரிவு தொலைபேசி எண்: 04567-230060 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
News October 18, 2025
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (அக்.17) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.