News May 14, 2024

ராம்நாடு: தண்ணீரில் மிதந்த ஆண் சடலம்

image

திருவாடானை ஓரியூர் சாலையில் டாஸ்மாக்
உள்ளது. இதன் எதிரே உள்ள அத்தாணி வயல் கண்மாயில் இன்று அதிகாலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று தண்ணீரில் மிதந்துள்ளது. இது குறித்து திருவாடானை கிராம நிர்வாக அலுவலர் நாகேந்திரன் அளித்த புகாரின்பேரில் திருவாடானை போலீசார் சடலத்தை மீட்டு திருவாடானை அரசு மருத்துவமனைக்கு
பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தினர்.

Similar News

News September 3, 2025

ராமநாதபுரம்: ஆட்சியர் தகவல் அறிவிப்பு

image

ராமநாதபுரம், (செப்.9) முதல் அக்டோபர் 31 வரை 163-BNSS தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இமானுவேல் சேகரன் நினைவு நாள் (செப்.11) மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை (அக்.28,30) காரணமாக, சட்ட ஒழுங்கு பாதுகாப்பிற்காக இந்த உத்தரவு அமல் படுத்தப்படுகிறது. வெளி மாவட்ட வாடகை வாகனங்கள் உரிய அனுமதியின்றி நுழைய தடை விதித்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன் அறிவித்துள்ளார்.

News September 3, 2025

ராமநாதபுரம்: மாவட்ட ஆட்சியர் தகவல்

image

ராமநாதபுரம், இயங்கும் அனைத்து உணவகங்களை இயக்கி வரும் உணவு வணிகர்களுக்கு உணவு பாதுகாப்பு உரிமம் பெற மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் அறிவுறுத்தியுள்ளார். இதன்படி தாங்கள் விற்பனை செய்யும் உணவுப் பொருட்களின் வகை தரத்திற்கு ஏற்ப உணவு பாதுகாப்பு சான்றிதழ் அல்லது தர சான்றிதழ் நிச்சயமாக பெற்று இருக்க வேண்டுமென அறிவிப்பு செய்துள்ளார். இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வெளியிட்டுள்ளார்.

News September 3, 2025

இராமநாதபுரம்: எஸ்பி அலுவலகத்தில் குறைதீர் முகாம்

image

இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமை பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இன்று நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் ஐபிஎஸ் அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று, உடனுக்குடன் தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

error: Content is protected !!