News September 14, 2024
ராம்நாடு டிஎன்பிஎஸ்சி தேர்வு : 3,752 பேர் ஆப்சென்ட்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 47 மையங்களில் 56 அறைகளில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ முதல்நிலைத் தேர்வு இன்று(செப்.14) நடந்தது. இந்த தேர்விற்கு விண்ணப்பித்த 15,657 பேரில் 11,905 பேர் மட்டும் பங்கேற்றனர். கண்காணிப்பு அலுவலர்கள் 2 பேர் தலைமையில் 55 தேர்வு மைய பார்வையாளர்கள் பணியில் ஈடுபட்டனர். 13 நடமாடும் கண்காணிப்பு குழு, 2 பறக்கும் படை குழு தேர்வு மையங்களை கண்காணித்தனர்.
Similar News
News November 6, 2025
ராமநாதபுரம் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஜீவா நகர் நெசவாளர் பயிற்சி மையத்தில் இளைஞர்களுக்கான நெசவாளர் பயிற்சி முகாம் துவங்கப்பட்டுள்ளது. இதில் 18 வயது முதல் 28 வயது வரையிலான ஆண், பெண் நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் பயிற்சி முடிந்தவுடன் ஊக்கத்தொகை, திறன் மேம்பாட்டு மையம் சார்பில் சான்றிதழ் வழங்கப்படும் என கைத்தறி உதவி இயக்குனர் சேரன் தெரிவித்தார்.
News November 6, 2025
ராம்நாடு: போட்டி தேர்வர்களுக்கு குட் நியூஸ்..!

தமிழக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக, மென் பாடக் குறிப்புகள் இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. இனி TNPSC, TNUSRB, RRB மற்றும் TRB போன்ற அனைத்து தேர்வுகளுக்குமான பாடத்திட்டம் தொடர்பான சந்தேகங்களை இந்த லிங்கை<
News November 6, 2025
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் (நவ. 5) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.


