News November 20, 2025

ராம்நாடு: சூப்பர் வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க

image

ராமநாதபுரம் மக்களே, மாவட்ட வேலைவாய்ப்பு மையம் நடத்தும் மாதாந்திர <>தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்<<>> நாளை (நவ. 21) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதில், 20 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளன. 10th, 12th, ITI, டிப்ளமோ மற்றும் டிகிரி படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்கள் அறிய 8220809422 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். பயனுள்ள இத்தகவலை உடனே SHARE பண்ணுங்க

Similar News

News November 21, 2025

ராமேஸ்வரம் மாணவி கொலை: சாட்சியை காக்க கோரிக்கை

image

ராமேஸ்வரத்தில் பள்ளிக்கு சென்ற பிளஸ் 2 மாணவி ஷாலினியை ஒரு தலையாக காதலித்த போதை இளைஞர் முனியராஜ் 21, கத்தியால் குத்திக்கொலை செய்தார். ஷாலினியுடன் மற்றொரு பிளஸ் 2 மாணவியும் உடன் சென்றுள்ளார்.அவரை போலீசார் இவ்வழக்கில் முக்கிய சாட்சியாக சேர்த்துள்ளனர்.அந்த மாணவிக்கு போலீசார் உரிய பாதுகாப்பு அளித்து விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

News November 21, 2025

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (நவ.21) கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகபட்டினம், இராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதுபற்றி தெரியாதவர்களக்கு SHARE செய்து உதவுங்க.

News November 21, 2025

ஆட்சியரிடம் வாழ்த்து பெற்ற முதுகுளத்தூர் மாணவி

image

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள தெற்கு காக்கூர் கிராமத்தை சேர்ந்த ஜோதி மலர் என்ற மாணவி தாய்லாந்தில் நடைபெற்ற மிஸ் ஹெரிடேஜ் இண்டர்நேஷனல் 2025 போட்டியில் கலாச்சார தூதர் பட்டம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார். இதையடுத்து மாணவி ஜோதி மலர் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

error: Content is protected !!