News January 27, 2026

ராம்நாடு : சமையல் சிலிண்டர் வாங்குவோர் கவனத்திற்கு!

image

இராமநாதபுரம் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கி கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <>க்ளிக் <<>>செய்து (Bharatgas, indane, HP) எந்த நிறுவனம் என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News February 4, 2026

ராமநாதபுரத்தில் 461 பேர் அதிரடி கைது

image

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று (பிப்.3) சத்துணவு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க துணை தலைவர் தனலட்சுமி இதற்கு தலைமை தாங்கினார். இதில், ஓய்வூதியம், அகவிலைப்படி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட முயன்றனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட 461 பேரை போலீசார் கைது செய்து நேற்று மாலை விடுவித்தனர்.

News February 4, 2026

ராமநாதபுரம்: மீனவர்கள் 9 பேர் விடுதலை

image

கடந்த டிச.28ல் மண்டபம் மீனவர்கள் 3 பேர், ஜன.3ல் மயிலாடுதுறை மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. இதில், மண்டபம் மீனவர்கள் 2 பேரையும், மயிலாடுதுறை மீனவர்கள் 7 பேரையும் இலங்கை நீதிமன்றம் நேற்று (பிப்.3) விடுதலை செய்துள்ளது. 3 மீனவர்களுக்கு 6 மாத சிறை தண்டனையும் ரூ.40 லட்சம் அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News February 4, 2026

தேசிய அளவில் நடைபெற உள்ள கடிதம் எழுதும் போட்டி

image

ராமநாதபுரம் : அஞ்சல் துறை சார்பில் இளம் தலைமுறையினரை கடிதம் எழுத ஊக்கப்படுத்தும் வகையில் 9 முதல் 15 வயது மாணவர்களுக்கு கடிதம் எழுதும் போட்டி தேசிய அளவில் நடைபெற உள்ளது. இதில் வெற்றிபெறுவர்கள் ரூ.50 ஆயிரம் வரை ரொக்கப்பரிசு பெறலாம்
விண்ணப் படிவங்களை பூர்த்தி செய்து பிப்.16க்குள் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், ராமநாதபுரம் கோட்டம், ராமநாதபுரம் – 623 501 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

error: Content is protected !!