News December 31, 2025
ராம்நாடு: கூட்டுறவு வங்கியில் வேலை! APPLY NOW!

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழக அரசு வேலை
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-50
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வி தகுதி: Any Degree, B.E/B.Tech
6. கடைசி தேதி: 31.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு உடனே இந்த தகவலை SHARE பண்ணுங்க.
Similar News
News February 9, 2026
இராமநாதபுரம் மாவட்டத்தில் மற்றுமொரு புதிய பாலம்!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வாகனங்களில் வருகின்றனர். இதில் பாம்பன் பாலத்தில் வந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பரமக்குடியில் இருந்து இராமநாதபுரம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி துவங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் பாம்பன் கடலில் புதிய பாலம் அமைக்க கருவி மூலம் சர்வே எடுக்கும் பணி நேற்று நடைபெற்றது. SHARE
News February 9, 2026
இராம்நாடு: பெட்ரோல் குண்டு வீச்சு; இருவர் கைது!

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ரயில்வே பீடரோடு பகுதியில் சங்கு கடை நடத்தி வரும் குமரன்குருவின் கடை மீது சனிக்கிழமை இரவு 9.45 மணியளவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சங்கு மூட்டைகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் நேதாஜி நகரைச் சேர்ந்த பார்த்திபன், கோவிந்தராஜ் ஆகிய இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
News February 8, 2026
BREAKING இராம்நாடு: லஞ்சம் வாங்கிய VAO கைது!

ராமநாதபுரம், புதுமடம் கிராமத்தில் விஏஓவாக பணியாற்றுபவர் அனுராஜ். இவரிடம் ஒரு நபர் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய அணுகி உள்ளார். அப்பொழுது தனக்கு ரூ.5000 லஞ்சம் தர வேண்டும் என கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தகவல் தெரிவித்தின் பேரில் ரசாயனம் தடவிய ரூ.5000யை கிராம நிர்வாக அலுவரிடம் கொடுத்துள்ளார். உடனடியாக லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.


