News June 15, 2024

ராம்நாடு: கடலுக்குச் சென்ற முதல் நாளில் 2 பேர் பலி!

image

மண்டபம் சேது நகரைச் சேர்ந்த சுதர்சன் என்பவரது விசைப்படகு, வடக்கு கடலில் மீன்பிடிக்க இன்று அதிகாலை சென்றது. 6 நாட்டிக்கல் தொலைவில் சென்ற படகு பழுதாகி கடலில் மூழ்கியது. இதிலிருந்த முஹமது ஹனீபா, பிரசாத் மற்றும் மற்றொரு படகு உதவியாளர் கரை சேர்ந்தனர். மாயமான பாம்பன் பகுதி மீனவர் மூவரில் இருவர் இறந்தனர். இருவரின் உடல்களை இந்திய கடலோரக் காவல் படையினர் மீட்டு மண்டபம் வடக்கு கடற்கரை கொண்டு வருகின்றனர்.

Similar News

News August 27, 2025

இராம்நாடு: மதுவிலக்கு துறையில் வேலை

image

ராமநாதபுரம் மக்களே; தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு & கலால் துறையில் Specialists, Assistant, Data Entry Operator பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. (அடிப்படை) டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான சம்பளம் ரூ.40,000 முதல் ரூ.1,50,000 வரை. பணியிடங்களுக்கு ஏற்ப கல்வித் தகுதி மற்றும் விவரங்களை அறிய <>கிளிக்<<>> செய்து பார்வையிடவும். தகவலை மற்றவர்களுடன் *ஷேர் செய்யவும்.

News August 27, 2025

ராம்நாடு: VAO லஞ்சம் கேட்டால் இதை பண்ணுங்க..

image

ராமநாதபுரம் மக்களே, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது, பயிர்களை ஆய்வு செய்வது VAOவின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04567-230036) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க

News August 27, 2025

ராமநாதபுரத்தில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

ராமநாதபுரம் மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்கள்.

error: Content is protected !!