News November 10, 2025

ராம்நாடு: ஓடும் பேருந்தில் நடத்துனருக்கு மாரடைப்பு

image

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நேற்று கரூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ராமேஸ்வரம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் நடத்துனராக பணியில் இருந்தார். இந்நிலையில் பேருந்து பார்த்திபனூர் அருகே வந்த போது ராஜேந்திரனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு ஓடும் பேருந்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Similar News

News November 10, 2025

ராம்நாடு: தையல் எந்திரம் பெற ஆட்சியர் அழைப்பு

image

ராம்நாடு மக்களே, மாவட்ட ஆட்சியர் ரஞ்சீத்சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் தையல் பயிற்சி பெற்ற முன்னாள் படைவீரர் மனைவி, கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்களுக்கு இலவச தையல் எந்திரம் வழங்கப்படுகிறது. ராமநாதபுரம் அலுவலகத்திற்கு நேரில் உரிய ஆவணங்களுடன் நவ. 25க்குள் வருகை தந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

News November 10, 2025

ராம்நாடு: டிகிரி போதும்., ரயில்வேயில் சூப்பர் வேலை!

image

ராம்நாடு மக்களே, இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Ticket Supervisor, Station Master உள்ளிட்ட 5810 பணியிடங்களக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் நவ 20க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.25,500 – ரூ.35,400 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் செய்யுங்க.

News November 10, 2025

ராம்நாடு: 11 மீனவர்கள் மீது வழக்கு

image

தொண்டி கடல் பகுதியில் கரைவலை முறையில் மீன் பிடித்த 11 மீனவர்கள் மீது மீன்வளத் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சோழியக்குடி பகுதியைச் சேர்ந்த 10 மீனவர்கள், விலாஞ்சியடியைச் சேர்ந்த 1 மீனவர் உட்பட 11 மீனவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வெடி வைத்து மீன் பிடிப்பது, அதிக ஒளி பாய்ச்சி மீன் பிடிப்பது, கரை வலை இழுவை முறையில் மீன் பிடிப்பது ஆகியவற்றுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

error: Content is protected !!