News January 16, 2026

ராம்நாடு: ஊரணியில் மூழ்கி இளைஞர் பலி!

image

திருவாடனை பகுதியை சேர்ந்தவர் கிரிஷ் (27). இவர் நேற்று மாலை வானியேந்தல் கிராமத்தில் உள்ள ஊரணியில் குளித்த போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்றவர் நீரில் மூழ்கினார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்க முயன்றும், முடியாததால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். திருவாடனை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் தேடி சகதியில் சிக்கி உயிரிழந்த கிரிஷ் உடலை மீட்டனர். இதுகுறித்து திருவாடனை போலீசார் விசாரனை.

Similar News

News February 11, 2026

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (பிப்.10) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

News February 10, 2026

ராம்நாடு: இனி இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்

image

ராம்நாடு மக்களே, தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <>aservices.t police.gov.in<<>> என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News February 10, 2026

ராம்நாடு: B.E/B.Tech முடித்தால் ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை

image

ராம்நாடு மக்களே, BSNL நிறுவனத்தில் காலியாக உள்ள 120 Senior Executive Trainee பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 21 – 30 வயதுகுட்பட்ட B.E/B.Tech, CA/CMA படித்தவர்கள் மார்ச் 7க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.24,900 – 50,500 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்யுங்க.

error: Content is protected !!