News January 9, 2026

ராம்நாடு: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

image

ராம்நாடு மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <>Tamil Nilam <<>>என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT.!

Similar News

News January 23, 2026

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (ஜனவரி 22) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

News January 22, 2026

இராம்நாடு: விடைபெற தயாராகும் பாம்பன் பாலம்

image

பாம்பனில் ஆங்கிலேயர் அமைத்த பழைய ரயில் தூக்குபாலம் அதன் உறுதித்தன்மை இழந்ததால் ரயில்வே நிர்வாகம் அதனை அகற்ற முடிவு செய்து டெண்டர் விடப்பட்டு ரூ.2.81கோடியில் தனியார் நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது. இன்று(ஜன.22) முதல் பணிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான பூஜையானது தனியார் நிறுவனம் சார்பில் நடைபெற்றுள்ளது.

News January 22, 2026

BREAKING ராம்நாடு: 3 நாட்களுக்கு குடிநீர் வராது

image

காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் ராமநாதபுரம் சக்கரக்கோட்டை ரயில்வே தண்டவாளம் அருகே உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் கசிவை சரிசெய்யும் பணிக்காக வரும் 27, 28, 29 ஆகிய மூன்று நாட்களுக்கு கீழக்கரை, திருப்புல்லாணி ஒன்றியம், மண்டபம் பேரூராட்சி, ராமநாதபுரம், ராமேஸ்வரம் நகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு கூட்டுக் குடிநீர் அலுவலர் அறிவிப்பு. *ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!