News November 4, 2025
ராம்நாடு: இலவச கடல் சிப்பி பயிற்சி

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் 8/59, C4 – மாதவன் நகர் பகுதியில் கடல் சிப்பி பயிற்சி இலவசமாக தமிழ்நாடு அரசு சார்பில் நடைப்பெற உள்ளது. பயிற்சி காலம் 3 நாட்கள். பயிற்சி ஆரம்ப நாள் (நவ-06) முதல் (நவ-09) வரை. நேரம் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை. பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். காலை, மாலை தேநீர் இலவசமாக வழங்கப்படும். மேலும், தொடர்புக்கு: 85 31 86 48 66.
Similar News
News November 4, 2025
ராம்நாடு: கார்களை அடித்து நொறுக்கியவர்கள் கைது

இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்களை சேதப்படுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட நபர்கள் மீது சத்திரக்குடி காவல் நிலையத்தில் 3 வழக்குகள் பதிவு செய்து 7 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக சமூக ஒற்றுமையை குலைக்கும் வகையிலான பதிவுகளை சமூக வலைதளங்களில் பகிர்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி சந்தீஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
News November 4, 2025
ராம்நாடு: Gpay, Phonepe, paytm இனி தேவையில்லை!

ராம்நாடு மக்களே Gpay, Phonepe, paytm தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.
News November 4, 2025
பரமக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

சிவகங்கை மாவட்டம் இளமனூரில் நேற்று (நவம்பர்.03) நடந்த இரு தரப்பினரிடையே மோதலால் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஐந்து முனை ரோட்டில் அப்பகுதி மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டதால் பரப்பான சூழல் நிலவியது. இதனால் பரமக்குடி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


